Monday, September 13, 2010

மணம் நாட ஒரு உரையாடல்...

கண்ணிரண்டும் கயல் விழி,
காதல் பேசும் பன்மொழி,
இவை அறிந்துகொள்ளும் ஒரே வழி,
இக்கவியை படியடி உன் விழிவழி...

அகத்தின் அழகி,
அன்பால் பழகி,
என் ஜகத்தினை வெல்லும்,
அவள் கன்னக்குழி...

அன்பு தோழி, பேசும் மொழி,
இனிக்கும் சொற்களின் தேன்துளி,
மனம் மணக்கும் மழைத்துளி
மணம் முடிக்க அருள் பொழி,

பௌர்ணமியின் முழுமதி
பெண்ணினத்தின் அதிபதி,
என்செய்யும் உந்தன் சதி,
நீதானடி எந்தன் திருமதி..

நிறமில்லா ஒரு வானவில்

உறக்கமில்லை விழியில்,
போவதெந்த வழியில்
வெளிச்சமில்ல நிலவில்
நிறமில்லா ஒரு வானவில்
நீயில்லாததென் வாழ்வில்...

நீ தான்..

என்னை இமைக்க வைத்ததும் நீ தான்..

என்னை இயக்கி வைத்ததும் நீ தான்..

கண்மூடி கனவினிலும் நீ தான்..

கண்விழிக்க எதிரிலும் நீ தான்..

என்னை பேச வைப்பதும் நீ தான்..

ஊமையாய் மாறவைப்பதும் நீ தான்..

என்னை சிந்திக்க வைப்பதும் நீ தான்..

என்னை சிரிக்க வைப்பதும் நீ தான்..

என்னை தொலைக்க வைத்ததும் நீ தான்..

என்னை தேட வைத்ததும் நீ தான்..

என்உயிர் துடிக்க வைத்ததும் நீ தான்..

என்துயர் துடைக்க வைத்ததும் நீ தான்..

என் ஹோர்மொன்களை சுரக்க வைப்பதும் நீ தான்..

மனதில் ஹார்மொனியும் வசிக்க வைப்பதும் நீ தான்..

இப்படி கிறுக்க வைத்ததும் நீ தான்..

உன்மேல் கிறுக்கனாய் மாற வைத்ததும் நீ தான்..