Sunday, June 14, 2009
கனவுகளும்!! நிஜங்களும்!! Part - 2
சாயம் பூசிய கன்னங்கள்,
மயக்கும் விழிகள்,
செர்ரி நிற உதடுகள்
புன்னகையுடன் நலம் விசாரித்து,
மாய உலகத்தினுள் வரவேற்றாள்,
விமான பணிப்பெண்..
என் உடமைகளை பத்திரமாக,
எதுத்து வைத்தன அவளின் இருகைகள்,
எனக்கென காத்திருந்த,
ஜன்னலோர என் இருக்கைகள்,
அதை காட்டிவிட்டு, விடை பெற்றாள்..
இருக்கையில் அமர்ந்து, ரசித்தேன்
அழகான விமான பறவைகளை,
சிறகு விரித்த பறவைகளை,
சீறி பாயும் பறவைகளை,
சீராய் நிற்கும் பறவைகளை,
காற்றில் அசைந்து நடனமிடும் பறவைகளை,
மனிதனால் இயக்கும் பறவைகளை,
மனிதனை சுமக்கும் பறவைகளை,
அந்த சிறிய ஜன்னலின் வழியே,
கண்டு நான் களித்திருக்க...
என் கவனம் சிதைக்கும் வன்னம்,
யாரோ என்னை தூரத்தில்
அழைப்பது போன்றதொரு உணர்வு..
இறந்த கால நினைவுகளை,
அசை போட வைத்தது...
காலச்சக்கரத்துக்குள் நுழைந்து,
பின்னோக்கி செல்கிறேன்,
என் இளமை காலத்திற்குள்...
பரங்கிமலை,
அது தான் என் பொதிகை மலை..
சிறிய குன்று தான்,
பல நாட்கள்,
அதன் சிகரத்தில் நின்று,
இந்த நகரத்தின் அழகை
கண்டு ரசித்ததுண்டு..
வான்நோக்கி கூச்சலிட்டு என்குரளின்,
எதிரொலியை கேட்டு ரசித்ததுண்டு...
தாமஸ் மலையின் ஆலய மணிஓசை,
கேட்டுக்கொண்டே இயற்கையை ரசித்ததுண்டு...
அதன் அடிவாரத்தில் நின்று
நான் விளையாடியதும் உண்டு..
நான் தொட்ட முதல் சிகரமது,
என்னை அழைத்த முதல் சொர்கமுமது,
விமான விருந்தினர்கள்,
வந்து செல்வதை,
வேடிக்கை பார்க்க,
கேளிக்கை வரி கேட்காத,
பார்வையாளர்களின் கூடம்,
அந்த ஆலமரம்...
வெயிலில் நிழலாக,
மழையில் குடையாக,
எத்தனையோ நாட்கள்,
என்னை பாதுகாத்தது,
அந்த ஆலமரம்...
விருந்திற்கு வரும்,
விமானங்களை, நான்
புன்னகையுடன் வரவேற்றும்,
கை அசைத்து வழியனுப்பியும்,
விளையாடும் வரவேர்பறை,
அந்த ஆலமரம்...
ஆயிரம் ஆயிரம் கனவுகள்,
கண்ணில் பறந்து கொண்டு,
நிஜங்களாக வாழ்ந்து கொண்டிருந்த,
எனக்கு ஆதரவாக,
அந்த ஆலமரம்..
மலையின் உச்சியில்,
இருந்ததே அந்த ஆலமரம்...
மகிழ்ச்சியின் உச்சியில்,
இருந்ததே என் இளமை காலபருவம்...
இறந்த காலத்திற்குள் சென்று,
நினைவுகளை மீட்டு வந்தேன்...
காலசுழர்ச்சியின் வேகத்தில் சிக்கி,
சிதைபடுகின்றன நம் நினைவுகள்..
விமானம், காற்றுடன் போட்டியிட்டு,
விண்ணை தாண்ட, பறக்க தொடங்கின..
இருக்கையை பற்றிக்கொண்டு,
ஜன்னல்வழியே பார்த்துக்கொண்டிருந்தேன்...
தன் கிளைகளை அசைத்தும் ஆட்டியும்,
என்னை விடை கொடுத்து,
வழி அனுப்பிவிட்டு நின்றது,
அந்த ஆலமரம்,
அனாதையாய்...
இந்த மனிதன்,
இன்று நிஜத்தில் பறந்தாலும்,
இன்னும் கனவில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான்..
கனவுகளை நிஜமாக்கும் முயற்சியில்,
நிஜங்களை மதிக்காமல் மறந்து போகிறான்..
எத்தனை மாற்றங்கள் இந்த மனிதனுக்குள்,
எத்தனை மாற்றங்கள் நம் கனவுகளுக்குள்,
எத்தனை மாற்றங்கள் நம் நிஜங்களுக்குள்,
மாறாமல் இருந்தது,
மறக்காமல் இருந்தது,
அந்த ஆலமரம் மட்டுமே,
இந்த மனிதன் அல்ல..
அந்த ஆலமரத்தின்,
தென்றல் காற்றின் சுகத்தை,
மனதில் சுமந்து கொண்டும்,
இறந்த கால நினைவுகளை,
இறக்க விடாது நினைவில் கொண்டும்,
விடை கொடுத்தவாறே,
வானில் பறக்கிறேன்....
கனவுகளும்!! நிஜங்களும்!! Part - 1
சுறுசுறுப்பான காலைநேரத்தில்,
ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்து செல்லும்,
தாரை தாரையை வாகன ஊர்திகள்...
கதர் சட்டையும், கறுக்கி போகும்,
அளவில் புகையை கக்கி கொண்டுஇருக்கும்..
வாகனங்களை வேடிக்கையாய்,
பார்த்துகொண்டிருந்தவனாய் நான்..
"நன்றி மீண்டும் வருக!" என்று
நீல நிற பலகையில் எழுதி இருக்க,
சிங்கார சென்னை,
என்னை சென்று வா என்றது..
சிங்காரம்,
நான் அணிந்திருந்த ஆடையில் இல்லை,
அருகில் இருந்த அன்னையின்
அழுகையில் இட்டு இருந்தது..
சிங்காரம்,
நான் பூத்திருந்த புன்னகையில் இல்லை,
வெளிநாட்டில் வேலையென்று எந்தன் பெருமை
பாடும் தந்தையின் பாட்டில் இருந்தது..
சிங்காரம்,
நான் வந்துகொண்டிருந்த நகர வீதிகளில் இல்லை,
பிரியா விடை கொடுக்க வரும்,
பிரியமானவர்களின் விழிகளில் ஒளிந்திருந்தது..
ஒய்யாரமாய், இத்தனையும்,
ரசித்தவனாய்,
வந்து அடைந்தேன்...
மீனம்பாக்கம்,
சென்னையின் விமான நிலையம்,
விமானங்களின் வேடந்தாங்கல்,
இயந்திர பறவைகளின் சரணாலயம்,
விருந்தினர்களாக வந்து செல்லும்
விமானங்களுக்கு விருந்து படைக்கும்,
விருந்தினர் மாளிகை...
பல பல மனிதர்கள்,
பல பல மொழிகள்,
பல பல நாட்டினர்கள்,
பள பளக்கும் விமானகள்,
விசித்ர மனிதர்களின் வினோத,
வழி அனுப்புதலும் ,
வர வேர்ப்புக்களும்,
அரங்கேறி கொண்டிஇருக்க..
சிலரின் கண்ணில் கண்ணீர் துளிகள்,
சிலரின் இதழில் புன்னகை துளிகள்..
திருவிழா கூட்டத்தின் உற்சாகம்,
இரங்கல் கூட்டத்தின் மௌனம்,
இரண்டும் கலந்திருந்த இடம் அது...
அறிவுப்பு பலகை, நான்
பறக்கவிருக்கும் பறவையின் பெயரையும்,
விடை பெரும் நேரத்தை குறித்தது,
நிகழ்கால கனவுகளோடு
வரும்காலத்தில் நிஜாங்கலாக்க புறப்பட்டேன்...
வெள்ளையனிடம் வாங்கிய சுதத்திரத்தை இங்கயே அடகு வைத்து,
மீண்டும் அந்நியனிடம் அடிமையாக புறப்பட்டேன்..
நம்நாட்டில் இருந்து அள்ளி சென்ற செல்வங்களில்,
கொஞ்சம் மீட்டு வர நானும் புறப்பட்டேன்..
அந்நிய நாட்டிற்க்கு சென்று, நம்நாட்டின்
அந்நிய செலாவணியை அதிகரிக்க புறப்பட்டேன்...
அனைவரிடமும் விடை பெற்றவனாய்,
என் எதிர்காலம் கேட்டிடும் கேள்விகளுக்கு,
விடை தெரியாமல், விடை தேடி புறப்பட்டேன்..
விஞ்யானத்தில் மனிதன் கண்டெடுத்த
ராட்சச பறவையின் முதுகில் ஏறி புறப்பட்டேன்..
திசை மாற்றிய தருணம்..
எச்சில் வரண்டுபோன தருணம்,
தமிழ் அகராதி அருகில் இருந்த போதிலும்,
வார்த்தைகள் தொலைந்தபோன தருணம்,
ஐந்து மொழிகள் தெரிந்திருந்த போதிலும்,
மொழிகள் ஊமையாகி போன தருணம்,
அவள் கூர்மையான கண்கள் என்னிடம்
மௌனம் மட்டுமே பேசிய தருணம்,
NO SMOKING Pls....
புகையை வெறுத்தது அவனது இருதயம்.
பகையாய் ஆனது அவனது உடல்,
இரையை போனது அவன் ஈரல்.
புகையாய் கரைந்தான், காற்றினில்,
புன்னகையாய் சிரித்திருந்தான், புகைபடதினில்...
மதுவின் திருமணம்....
மதிக்காமல், வெகு-
மதிகள் ரொக்கம் கொடுத்து, திரு-
மதியாகிவிட்டர்கள், இந்த
மதி கேட்டவர்கள்...
மதியின் ஒளி மங்கிய நிலையில்,
மடையின் அருகில், மங்கையின் நினைவில்,
மதுவின் மயக்கத்தில் நான்....
காதலித்து பார்!!!
உன்னை சுற்றி ஓர் ஒளி வட்டம் தோன்றும்,
உன் கைஎழுதுக்களும் அழகாகும்"
வைரமுத்துவின் இந்த வரிகள்,
இனி உனக்கு பொருந்தாது,
இது IT-யின் காலம்...
காதலித்து பார்!!!
ஆங்கில கீபோர்டும் தமிழ் அடிக்கும்,
உன் தட்டேழுதுக்களும் அழகாகும்,
Microsoft-in ஜன்னலில் (Windows) தமிழ் தென்றல் வீசும்,
Gmail-யில் காதல் கடிதங்கள் மின்னஞ்சலில் மின்னலாய் பறக்கும்,
அதனால் உன் inbox, நிரம்பி வழியும்,
இதயங்கள் internet மூலம், transfer ஆகும்,
C++, JAVA ப்ரோக்ராம்சும், உனக்காக கவிதை எழுதும்,
இந்த விஞ்யான விந்தையிலும், மெய்ஞானம் பிறக்கும்,
காதலித்து பார்!!!
கவிதையின் பிறப்பிடம்....
சொல்கிறேன் கேள்!!
காற்று பிறந்த இடத்தில் இருந்து,
கடல் பிறந்த இடத்தில் இருந்து,
வானம் தொடங்குகின்ற இடத்தில் இருந்து,
பூமி முடிகின்ற இடத்தில் இருந்து,
மேகங்கள் உருவான இடத்தில் இருந்து,
கடலில், மழை துளி தொலைந்த இடத்தில் இருந்து,
மழையில், கண்ணீர் தொலைந்த இடத்தில் இருந்து,
பூக்களின் வாசம் வீசுகின்ற இடத்தில் இருந்து,
சூரியன் மறையும் திசையில் இருந்து,
மூங்கில் காட்டில், காற்று பாடும் கானத்தில் இருந்து,
பிள்ளையின் கள்ளமில்லா சிரிப்பில் இருந்து,
காதலியின் கடைக்கண் பார்வையில் இருந்து,
மனைவியின் முதல் முத்தத்தில் இருந்து,
கனவில் நாம் செல்லும் இடத்தில் இருந்து,
நினைவில் நாம் காணும் இடத்தில் இருந்து,
மௌனம் பேசும் வார்த்தைகளில் இருந்து,
ருசித்து பார்!!
இன்னும் சமைக்கப்படாத,
எத்தனையோ கவிசுவைகள் விருந்து படைக்கும்,
உனக்காக...
ரசித்து பார்!!
இன்னும் எழுதப்படாத,
எத்தனையோ கவிதைகள் காத்திருக்கும்,
உனக்காக....
தேடி பார்!!
இன்னும் சிந்திக்கப்படாத,
எத்தனையோ கவிகள் சிறகடித்து பறக்கும்,
உனக்காக...
Saturday, June 13, 2009
இயற்கையின் காதல்....
வானம் புரிகின்ற காதல் மொழி - காற்று,
வானம் ஏவி விடும் காதல் தூது - கடல் அலைகள்,
வானம் பூமியினை கண்டு கண்ணடிக்க - மின்னல்கள்,
வானிற்கும் மண்ணிற்கும் இடையில் ஊடல் - இடிஒசை,
வானிற்கும் மண்ணிற்கும் இடையில் கூடல் - புயல்மழை
இயற்கையை ரசிக்க கற்றுகொண்டிருந்தேன்,
கடற்கரையில், கடல் அலைகள்,
எதோ நம்மிடம் சொல்ல நினைத்து,
உருண்டு ஓடி வந்து, சொல்லாமலே
மௌனமாய் திரும்பி சென்று கொண்டிருந்தது
என்று தான் நானும் நினைத்திருந்தேன்,
இயற்கையை ரசிக்காதவனுக்கு புரியாவன்னம்,
இயற்கையின் மொழியில் பரிமாறிகொண்டிருந்தது வானம்,
காதல் வார்த்தைகளை..
கடல், இயற்கை இயக்கும் அஞ்சல் நிலையம்,
கடற்கரை, பூமியின் அஞ்சல் பெட்டி,
தினம் தினம், பல்லாயிர அஞ்சல்காரர்கள்,
கடல் அலைகள் , தம்பணியை,
செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள்,
பலகோடி காதல் கடிதங்களை,
பூமியின் அஞ்சலரையில் சேர்த்து கொண்டிருந்தார்கள்..
இவைகள் வெறும், கடல் அலைகள் அல்ல,
இவர்கள் காதல் தூதுவன்கள்,
வானிடம் இருந்து எழும் காதல் அலைகள்,
என்றே விளங்கியது....
அப்படியாயின், இந்த காதல் கதையில்,
ஆண் யார்? பெண் யார்?
என்கிற கேள்வியும் எழத்தான் செய்தது,
விடை தேட முயன்றேன்,
பொறி தட்டியது, விடையும் கிட்டியது..
பூமித்தாய் பெற்ற பிள்ளைகள் நாம் என்கிறோமே,
இந்த உலகிலுள்ள எல்லா ஜீவா ராசிகளுக்கும்,
உயிர் கொடுத்தவள்..
பச்சை பட்டாடையாய் புல்வெளிகளை
தாவணியாய் போர்த்தியவள்,
பெண்ணின் மனதை போலவே,
பூமிற்கு அடியிலும்,
ஆழமாக புதைந்திருக்கும் ரகசியங்கள்,
திகைக்கும் வரலாற்று நினைவு சுவடுகள்,
அப்படியாயின், பூமி தான் பெண்ணோ...
ஆண்டவன் எங்கே உள்ளன் என்றேன் ஒரு முனியிடம்,
அண்ணார்ந்து மேலே பார்த்து, விண்ணை சுட்டிகாட்டியது அவர் விரல்கள்,
விண்ணை தான் ஆண்டவன் என்கிறாரோ
இருக்கலாம்,
பூமி பெண்ணின், மனதை ஆழ்வதால்,
வானத்தின் புனைப்பெயர் ஆண்டவன் என சொல்லக்கூடும்..
ஆண், ஒரு பெண்ணின் பின்பம் என்பர்,
பூமியை பிரதிபலிகிரதே வானம்,
அப்படியாயின், வானம் தான் ஆண்..
ஆம்,
பெண் - பூமி,
ஆண் - வானம்
காதல்,
ஆணிற்கும், பெண்ணிற்கும் இடையில்,
உணரக்கூடியது, உயிர்கொண்டது,
கண்ணிற்கு புலபடாது,
காற்று,
வானிற்கும், மண்ணிற்கும் இடையில்,
உணரக்கூடியது, உயிர்கொண்டது,
கண்ணிற்கு புலப்படாது,
காற்று, இயற்கை புரியும் காதல்...
வானமும் பூமியும்
புரிகின்ற காதலில்,
பிறக்கின்ற குழந்தைகள் நாம்...
காதல் என்ற காற்றை,
சுவாசித்து வாழும் பிள்ளைகள் நாம்..
இந்த பூமி சுற்றித்திரிவது,
விண்ணின் மேல் கொண்ட காதலால்,
எரிமலைகள் வெடிப்பது,
பூமி என்னும் காதலியின் கோவத்தால்,
புயல்கள் எழுவது,
இருவரின் காதல் (காற்று) அதிகரிப்பதால்,
கடல் பொங்குவது,
இருவரின் வாக்குவாதங்களால்,
இவர்களின் காதல் இல்லையேல்,
பூமி சுற்றுவது நின்று போய்விடும்,
வானம் இருண்டு போய்விடும்,
நாம் சுவாசிக்கும் காற்று (காதல்) தீர்ந்துவிடும்,
உயிர்களின் பிறப்பும் நின்று போய்விடும்..
இயற்கை புரியும், காதல் காற்று,
என்னையும் தீண்டிவிட்டு சென்றது,
நானும் காதலிக்க தொடங்கிவிட்டேன்,
இவர்களின் காதலின் மீது,
இயற்கையின் ரசிகனாய்......
சித்திரை பெண்ணின் நித்திரை...
என் நன்றிகள்!!!
நீ உறங்கும்போதும்,
காற்றில் கலந்த என் நினைவுகளை,
எல்லாம் ஒருசேர உன்மேல் தூவுகின்றதே!!!
உன் வீட்டு ஜன்னலுக்கு,
என் நன்றிகள்!!!
உனது பிம்பத்தை,
கண்ணாடி நிலவில்,
நீ உறங்கும் அழகை காண முடிகின்றதே!!!
உன்னை கடித்த கொசுவிற்கு,
என் நன்றிகள்!!
இதயங்களால் ஒன்று சேர்ந்த நம்மை,
உன் ரத்தத்தை என்னுடலில் சேர்க்க,
என்னையும் வந்து கடிகின்றதே!!!
உன் வீட்டு சுவர் கடிகாரத்துக்கு,
என் நன்றிகள்!!!
என்னகு உருவம் கொடுத்த,
உன் கனவினை கலைக்காதவன்னம்,
மணிஓசை எழுப்பாமல் நின்றுவிட்டதே!!!
உன் தலையணைக்கு,
என் நன்றிகள்!!!
தனிமை தாகத்தை,
உன் பக்கத்தில் நான் இல்லாத,
குறையை தீர்கின்றதே!!!
உன் வீட்டு விடிவிளக்கிற்கு,
என் நன்றிகள்!!!
அழகிய உன் மெல்லிடை கண்டு,
மயங்கிய இருளிடம் இருந்து,
மெல்லிய ஒளியால் விடியும் வரை காவல் காக்கின்றதே!!!
காரணம்? கருமை...
கண்ணின் கருமணி,
இமையிலிடும் கண்மை,
இதழொர மச்சம்,
தாயின் கருவரை,
தித்திக்கும் கட்டிகரும்பு,
இனிக்கும் கருப்பட்டி,
கூவுகின்ற இசைகுயில்,
கரிசல்காட்டு மண்,
கருமையான இவையனைத்தும்,
உனக்கு பிடித்திருக்கையில்...
கருப்பான என்னை மட்டும் ஏன் ஒதுக்கினாய்?
என் கருநிறதை கண்டு பிடிக்கவில்லையென்று..
என்னில் நீ!!!
யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் மௌனம் - மொழி
யாரையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஞானமோ - நீ!!!
யாரும் எளிதில் ரசிக்க கூடியது - இசை,
யாவரையும் எளிதில் ரசிக்க வைப்பவள் - நீ!!
யாரும் எளிதில் தன்னில் உணராதது - தவறு,
யாவையும் எளிதில் என்னில் உணர்த்தியதோ - நீ!!!
யாரும் எளிதில் சொல்லக்கூடியது - பொய்மை,
ஏதும் எளிதில் சொல்லாதவளோ - நீ!!
யாரும் எளிதில் பிடிக்க முடியாததோர் கடை - நேர்மை,
எங்கனவிலும் எளிதில் பிரிக்க முடியாத கதயோ - நீ!!!
யாரும் எளிதில் மறக்க முடியாதது - பிரிவு,
என்னையே எளிதில் மறக்க செய்தவளோ - நீ!!
யார்மனதையும் எளிதில் கொல்ல கூடிய ஆயுதம் - பேச்சு,
என்மனதையும் எளிதில் வெல்ல கூடிய ஆயுதமோ - நீ!!
யார்கண்ணாலும் எளிதில் காண கூடியது - கனவு,
என்கண்ணில் எளிதில் என்றும் காண்பதோ - நீ!!
அம்மா!!!
அன்னையே, என்னையே,
தாங்கினாய் உன் கருவிலே..
தாய்மையே, பெற்றியே,
குழந்தையை கருவறையிலே..
பிறப்பையே, கொடுத்தியே,
பிச்சையாய் என்னை இப்புவியிலே..
திண்ணையே, என்னையே,
ஏற்றினாய் உன் மடியிலே...
அட்சையே, உண்ணவே,
பால்புகட்டினாய் உன் மார்பிலே....
தாளமே, கையிலே,
தட்டினாய் என் நெஞ்சிலே..
நாதமே, இசையிலே,
உறங்கவைத்தாய் உன் தாலாட்டிலே....
உறக்கமே, கண்ணிலே,
விழித்திருந்தாய் நடு இரவிலே...
கனாவே, கண்ணிமயே,
பாதுகாத்தாய் என்னையுன் இரு கண்ணிலே...
உதயமே, அருகிலே,
காத்திருந்தாய் என்கண் விழிப்பிலே..
முத்தமே, அதிகாலையே,
மழைபொழிந்தாய் என் கண்ணிலே..
நித்தமே, நின்னையே,
மெய்மறந்தாய் என் சிரிப்பிலே..
உன்னையே, அழைக்கவே,
கற்பித்தாய் ஓர் நொடியிலே...
அழுகையே, என்னிலே,
அறிந்துகொண்டாய் அக் கணத்திலே..
அமுதமே, நிலவிலே,
ஊட்டினாய் உன் கையிலே...
நடக்கவே, பழக்கியே,
கண்டுகளிதாய் என் நடையையே...
காயமே, பட்டதே,
வருந்தினாய் உன் நெஞ்சிலே...
பேசவே, நினைக்கவே,
புரிந்துகொள்வாய் என் மனதையே...
ஏட்டிலே, எழுதியே,
பழக்கினாய் உன் பெயரையே..
பெண்மையே, உண்மையே,
புரியவைத்தாய் உன் அன்பிலே...
என்னுலகமே, உழவுதே,
இந்த ஒற்றை சொல்லிலே..
அம்மா...நட்பின் உயரம்..
ஏ… நண்பனே...
வாமணனை போல் நீ பொழுதும் உயர்ந்து கொண்டே இருக்கிறாய்...
உயரத்தில் மட்டும் அல்ல,
உன் ஈகை குணத்திலும் தான்..
IT Kadhal
முப்பொழுதும்!!
என் மடியில் கிடப்பதென்னவோ, கணினியே!!
ஆனால்,
எப்பொழுதும்!! என் நினைவில் கிடந்திருப்பது,
கன்னி நீயே!! ...