Saturday, June 13, 2009

இயற்கையின் காதல்....

விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையில் - காதல்,
வானம் புரிகின்ற காதல் மொழி - காற்று,
வானம் ஏவி விடும் காதல் தூது - கடல் அலைகள்,
வானம் பூமியினை கண்டு கண்ணடிக்க - மின்னல்கள்,
வானிற்கும் மண்ணிற்கும் இடையில் ஊடல் - இடிஒசை,
வானிற்கும் மண்ணிற்கும் இடையில் கூடல் - புயல்மழை

இயற்கையை ரசிக்க கற்றுகொண்டிருந்தேன்,
கடற்கரையில், கடல் அலைகள்,
எதோ நம்மிடம் சொல்ல நினைத்து,
உருண்டு ஓடி வந்து, சொல்லாமலே
மௌனமாய் திரும்பி சென்று கொண்டிருந்தது
என்று தான் நானும் நினைத்திருந்தேன்,

இயற்கையை ரசிக்காதவனுக்கு புரியாவன்னம்,
இயற்கையின் மொழியில் பரிமாறிகொண்டிருந்தது வானம்,
காதல் வார்த்தைகளை..

கடல், இயற்கை இயக்கும் அஞ்சல் நிலையம்,
கடற்கரை, பூமியின் அஞ்சல் பெட்டி,
தினம் தினம், பல்லாயிர அஞ்சல்காரர்கள்,
கடல் அலைகள் , தம்பணியை,
செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள்,
பலகோடி காதல் கடிதங்களை,
பூமியின் அஞ்சலரையில் சேர்த்து கொண்டிருந்தார்கள்..

இவைகள் வெறும், கடல் அலைகள் அல்ல,
இவர்கள் காதல் தூதுவன்கள்,
வானிடம் இருந்து எழும் காதல் அலைகள்,
என்றே விளங்கியது....

அப்படியாயின், இந்த காதல் கதையில்,
ஆண் யார்? பெண் யார்?
என்கிற கேள்வியும் எழத்தான் செய்தது,
விடை தேட முயன்றேன்,
பொறி தட்டியது, விடையும் கிட்டியது..

பூமித்தாய் பெற்ற பிள்ளைகள் நாம் என்கிறோமே,
இந்த உலகிலுள்ள எல்லா ஜீவா ராசிகளுக்கும்,
உயிர் கொடுத்தவள்..
பச்சை பட்டாடையாய் புல்வெளிகளை
தாவணியாய் போர்த்தியவள்,
பெண்ணின் மனதை போலவே,
பூமிற்கு அடியிலும்,
ஆழமாக புதைந்திருக்கும் ரகசியங்கள்,
திகைக்கும் வரலாற்று நினைவு சுவடுகள்,
அப்படியாயின், பூமி தான் பெண்ணோ...

ஆண்டவன் எங்கே உள்ளன் என்றேன் ஒரு முனியிடம்,
அண்ணார்ந்து மேலே பார்த்து, விண்ணை சுட்டிகாட்டியது அவர் விரல்கள்,
விண்ணை தான் ஆண்டவன் என்கிறாரோ
இருக்கலாம்,
பூமி பெண்ணின், மனதை ஆழ்வதால்,
வானத்தின் புனைப்பெயர் ஆண்டவன் என சொல்லக்கூடும்..
ஆண், ஒரு பெண்ணின் பின்பம் என்பர்,
பூமியை பிரதிபலிகிரதே வானம்,
அப்படியாயின், வானம் தான் ஆண்..

ஆம்,
பெண் - பூமி,
ஆண் - வானம்

காதல்,
ஆணிற்கும், பெண்ணிற்கும் இடையில்,
உணரக்கூடியது, உயிர்கொண்டது,
கண்ணிற்கு புலபடாது,

காற்று,
வானிற்கும், மண்ணிற்கும் இடையில்,
உணரக்கூடியது, உயிர்கொண்டது,
கண்ணிற்கு புலப்படாது,

காற்று, இயற்கை புரியும் காதல்...

வானமும் பூமியும்
புரிகின்ற காதலில்,
பிறக்கின்ற குழந்தைகள் நாம்...
காதல் என்ற காற்றை,
சுவாசித்து வாழும் பிள்ளைகள் நாம்..

இந்த பூமி சுற்றித்திரிவது,
விண்ணின் மேல் கொண்ட காதலால்,
எரிமலைகள் வெடிப்பது,
பூமி என்னும் காதலியின் கோவத்தால்,
புயல்கள் எழுவது,
இருவரின் காதல் (காற்று) அதிகரிப்பதால்,
கடல் பொங்குவது,
இருவரின் வாக்குவாதங்களால்,

இவர்களின் காதல் இல்லையேல்,
பூமி சுற்றுவது நின்று போய்விடும்,
வானம் இருண்டு போய்விடும்,
நாம் சுவாசிக்கும் காற்று (காதல்) தீர்ந்துவிடும்,
உயிர்களின் பிறப்பும் நின்று போய்விடும்..

இயற்கை புரியும், காதல் காற்று,
என்னையும் தீண்டிவிட்டு சென்றது,
நானும் காதலிக்க தொடங்கிவிட்டேன்,
இவர்களின் காதலின் மீது,
இயற்கையின் ரசிகனாய்......

No comments:

Post a Comment