Sunday, June 14, 2009

கவிதையின் பிறப்பிடம்....

கவிதைகள் பிறப்பது எங்கே?
சொல்கிறேன் கேள்!!

காற்று பிறந்த இடத்தில் இருந்து,
கடல் பிறந்த இடத்தில் இருந்து,
வானம் தொடங்குகின்ற இடத்தில் இருந்து,
பூமி முடிகின்ற இடத்தில் இருந்து,
மேகங்கள் உருவான இடத்தில் இருந்து,
கடலில், மழை துளி தொலைந்த இடத்தில் இருந்து,
மழையில், கண்ணீர் தொலைந்த இடத்தில் இருந்து,
பூக்களின் வாசம் வீசுகின்ற இடத்தில் இருந்து,
சூரியன் மறையும் திசையில் இருந்து,
மூங்கில் காட்டில், காற்று பாடும் கானத்தில் இருந்து,
பிள்ளையின் கள்ளமில்லா சிரிப்பில் இருந்து,
காதலியின் கடைக்கண் பார்வையில் இருந்து,
மனைவியின் முதல் முத்தத்தில் இருந்து,
கனவில் நாம் செல்லும் இடத்தில் இருந்து,
நினைவில் நாம் காணும் இடத்தில் இருந்து,
மௌனம் பேசும் வார்த்தைகளில் இருந்து,

ருசித்து பார்!!
இன்னும் சமைக்கப்படாத,
எத்தனையோ கவிசுவைகள் விருந்து படைக்கும்,
உனக்காக...

ரசித்து பார்!!
இன்னும் எழுதப்படாத,
எத்தனையோ கவிதைகள் காத்திருக்கும்,
உனக்காக....

தேடி பார்!!
இன்னும் சிந்திக்கப்படாத,
எத்தனையோ கவிகள் சிறகடித்து பறக்கும்,
உனக்காக...

No comments:

Post a Comment