பரபரப்பான நகரத்தில்,
சுறுசுறுப்பான காலைநேரத்தில்,
ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்து செல்லும்,
தாரை தாரையை வாகன ஊர்திகள்...
கதர் சட்டையும், கறுக்கி போகும்,
அளவில் புகையை கக்கி கொண்டுஇருக்கும்..
வாகனங்களை வேடிக்கையாய்,
பார்த்துகொண்டிருந்தவனாய் நான்..
"நன்றி மீண்டும் வருக!" என்று
நீல நிற பலகையில் எழுதி இருக்க,
சிங்கார சென்னை,
என்னை சென்று வா என்றது..
சிங்காரம்,
நான் அணிந்திருந்த ஆடையில் இல்லை,
அருகில் இருந்த அன்னையின்
அழுகையில் இட்டு இருந்தது..
சிங்காரம்,
நான் பூத்திருந்த புன்னகையில் இல்லை,
வெளிநாட்டில் வேலையென்று எந்தன் பெருமை
பாடும் தந்தையின் பாட்டில் இருந்தது..
சிங்காரம்,
நான் வந்துகொண்டிருந்த நகர வீதிகளில் இல்லை,
பிரியா விடை கொடுக்க வரும்,
பிரியமானவர்களின் விழிகளில் ஒளிந்திருந்தது..
ஒய்யாரமாய், இத்தனையும்,
ரசித்தவனாய்,
வந்து அடைந்தேன்...
மீனம்பாக்கம்,
சென்னையின் விமான நிலையம்,
விமானங்களின் வேடந்தாங்கல்,
இயந்திர பறவைகளின் சரணாலயம்,
விருந்தினர்களாக வந்து செல்லும்
விமானங்களுக்கு விருந்து படைக்கும்,
விருந்தினர் மாளிகை...
பல பல மனிதர்கள்,
பல பல மொழிகள்,
பல பல நாட்டினர்கள்,
பள பளக்கும் விமானகள்,
விசித்ர மனிதர்களின் வினோத,
வழி அனுப்புதலும் ,
வர வேர்ப்புக்களும்,
அரங்கேறி கொண்டிஇருக்க..
சிலரின் கண்ணில் கண்ணீர் துளிகள்,
சிலரின் இதழில் புன்னகை துளிகள்..
திருவிழா கூட்டத்தின் உற்சாகம்,
இரங்கல் கூட்டத்தின் மௌனம்,
இரண்டும் கலந்திருந்த இடம் அது...
அறிவுப்பு பலகை, நான்
பறக்கவிருக்கும் பறவையின் பெயரையும்,
விடை பெரும் நேரத்தை குறித்தது,
நிகழ்கால கனவுகளோடு
வரும்காலத்தில் நிஜாங்கலாக்க புறப்பட்டேன்...
வெள்ளையனிடம் வாங்கிய சுதத்திரத்தை இங்கயே அடகு வைத்து,
மீண்டும் அந்நியனிடம் அடிமையாக புறப்பட்டேன்..
நம்நாட்டில் இருந்து அள்ளி சென்ற செல்வங்களில்,
கொஞ்சம் மீட்டு வர நானும் புறப்பட்டேன்..
அந்நிய நாட்டிற்க்கு சென்று, நம்நாட்டின்
அந்நிய செலாவணியை அதிகரிக்க புறப்பட்டேன்...
அனைவரிடமும் விடை பெற்றவனாய்,
என் எதிர்காலம் கேட்டிடும் கேள்விகளுக்கு,
விடை தெரியாமல், விடை தேடி புறப்பட்டேன்..
விஞ்யானத்தில் மனிதன் கண்டெடுத்த
ராட்சச பறவையின் முதுகில் ஏறி புறப்பட்டேன்..
Sunday, June 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment